ஆரம்பத்தில் இருந்தே இறங்க ஆரம்பித்த நிப்டி, தொடர்ந்து சீராக இறங்கி, நாளின் இறுதியில் 394 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் ‘நிப்டி மிட்கேப்50’ குறியீடு அதிகபட்சமாக 1.66 சதவிகித இறக்கத்துடனும்; ‘நிப்டி மைக்ரோகேப் 250’ குறியீடு குறைந்தபட்சமாக 0.11 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில் 14 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 5 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் ‘நிப்டி பார்மா’ குறியீடு அதிகபட்சமாக 0.41 சதவிகித ஏற்றத்துடனும்; ‘நிப்டி ஆட்டோ’ குறியீடு அதிகபட்சமாக 3.15 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.

வர்த்தகம் நடந்த 3,296 பங்குகளில், 1,336 ஏற்றத்துடனும்; 1,867 இறக்கத்துடனும்; 93 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 20, 50, 100 மற்றும் 200 நாள் (இ.எம்.ஏ.,) சராசரிகளுக்கு கீழே மீண்டும் நிறைவடைந்துள்ளது. டெக்னிக்கலாக எம்.ஏ.சி.டி., இறங்குமுகத்தையும், ஆர்.ஓ.சி., ஓவர்சோல்டு என்ற நிலைமையையும் காட்டுகின்றன. ‘ஸ்டோகாஸ்ட்டிக் இண்டிகேட்டர்’ சிறியதொரு பவுன்ஸ் பேக் வரக்கூடும் என்ற நிலைமையை காட்டுகிறது. 23,800-ல் உடனடி சப்போர்ட்டையும், 24,200-ல் ரெசிஸ்டென்ஸையும் நிப்டி தற்சமயம் கொண்டுள்ளது. 24,200-வரை சென்றாலும்கூட உடனடியாக இறக்கம் வந்துவிடக்கூடிய வாய்ப்பு டெக்னிக்கலாக இருக்கவே செய்கிறது. செய்திகளே இதை தீர்மானிப்பதாக இருக்கும்.

