“ஏ.ஆர்.ரஹ்மானே இல்லை, நான் எம்மாத்திரம்னு மனச தேத்திக்கிட்டேன்!”- ‘கருப்பு’ படத்தில் நடித்த‌ ஆனந்தி

”காளி வெங்கட்டும் நானும் நடிச்சிருந்தோம். அவருக்கு ஜோடியா நடிச்சிருந்தேன். ஆனா கொஞ்ச நாள் முன்னாடி எஸ்.ஆர்.பிரபு சாரை ஒரு நிகழ்ச்சியில சந்திச்சேன். அப்ப அவர்கிட்ட பேசினப்ப, படத்துல நிறைய காட்சிகள் எடிட்ல போயிடுச்சு. நீங்க பண்ணின காட்சிகள்கூட வரும்னு சொல்ல முடியாது’ன்னு சொன்னார். சினிமாவுல இது சகஜமானதுதான். பெரிய நடிகர்களுடைய படங்களில் இது போன்ற சம்பவங்கள் தவிர்க்க முடியாது.

ஆனா சிலர் அதை நேர்மையாக சம்பந்தப்பட்டவர்கள்கிட்ட கூப்பிட்டுச் சொல்லிடுறாங்களே, அதுவே பெரிய விஷயம்தான். சிலர் சொல்லவே மாட்டாங்க. நாம நடிச்சுட்டு படத்துல இருக்கோமா இல்லையாங்கிறதை முதல் நாள் தியேட்டர் போய் ஒரு தவிப்போட பார்க்க வேண்டிய நிலைமையெல்லாம் இங்க நிறைய பேருக்கு வந்திருக்கும்.

நான் இதை சீரியஸா எடுத்துக்கிடறதில்லை. வருத்தம் இருக்கத்தான் செய்யும். ஆனா ஒரு முழுப்படமா அதைக் கொடுக்க வேண்டிய இடத்துல இருக்கிறவங்க அவங்க விருப்பப் படிதானே கொடுக்க விரும்புவாங்க.

அதனால டேக் இட் ஈஸினு கடந்து போயிட்டேன். ‘ஏ.ஆ. ரஹ்மானே படத்துல இல்லங்கிறப்ப நான் எம்மாத்திரம்’னு மனசுக்குச் சொல்லிட்டேன்” எனச் சிரிக்கிறார் ஆனந்தி.

Source link