'ஏ.டி.எம்., கார்டு இல்லாமலேயே ஜியோவில் பணம் எடுக்கலாம்'

‘ஜி யோ பைனான்சியல் சர்வீசஸ்’ நிறுவனத்தின் அங்கமான ‘ஜியோ பேமென்ட்ஸ் பேங்க்’, ஏ.டி.எம்., கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த வசதியை பயன்படுத்த, அருகில் உள்ள, ஜியோ வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட ‘பிசினஸ் கரஸ்பாண்டென்ட்’ மையங்களுக்கு செல்ல வேண்டும். அங்குள்ள யு.பி.ஐ., க்யு.ஆர்., கோடை ‘கூகுள்பே, போன்பே, பேடிஎம்’ வாயிலாக ஸ்கேன் செய்ய வேண்டும்.

எடுக்க விரும்பும் பணத்தின் அளவை பதிவிட்டு, யு.பி.ஐ., பின்னை உறுதி செய்ய வேண்டும். பரிவர்த்தனை முடிந்ததும், அந்த மையத்திலேயே உங்களுக்கான ரொக்கம் கொடுக்கப்படும். ஒரு முறை 5,000 ரூபாய் வரையும், தினசரி 10,000 ரூபாய் வரையும், மாதாந்திர அடிப்படையில் 50,000 ரூபாய் வரையும் பணம் எடுக்கலாம்.

Source link