ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சமூக தளத்தில் பிரபலமான பணக்கார இந்திய ரவுடி கைது

துபாய்:தன் ஆடம்பர வாழ்க்கை முறையை, ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைதளத்தில் பகிர்ந்து, 15 லட்சம் பின்தொடர்வோரை கொண்டு பிரபலமான, இந்தியாவைச் சேர்ந்த ரவுடி, துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரியானா மாநிலம் ரோஹ்தக் பகுதியைச் சேர்ந்தவர் இந்தர்ஜீத் யாதவ். இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சொகுசு கார்கள், உயர்தர உடைகள், பிரபல ஹோட்டல்கள், வெளிநாட்டு பயணங்கள் ஆகியவற்றை பகிர்ந்ததன் மூலம் பிரபலமானார். மேலும் ‘ஜெம்ஸ் டியூன்ஸ்’ என்ற இசை நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருக்கிறார்.

இவர் மீது ஹரியானா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் கொலை, நில அபகரிப்பு, மிரட்டி பணம் பறித்தல் என, 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 2024ம் ஆண்டு ரோஹ்தகில் நடந்த வியாபாரி ஒருவரின் கொலை வழக்குக்கு பின், இந்தியாவில் இருந்து தப்பி, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தார். உளவுத்துறை மற்றும் துபாய் போலீசாரின் உதவியோடு, நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Source link