10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்றைய கிரிக்கெட் திருவிழாவில் இரு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது.
முதல் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியதில் லக்னோ 4-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இன்றைய போட்டிக்கான டாஸில் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களை எடுத்தது.
அதனை தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய லக்னோ அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இறுதியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
