ஐந்து ஆண்டுகளாக எங்கே சென்றீர்கள்: காங்.,- – எம்.எல்.ஏ.,விடம் மக்கள் ஆவேசம்

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்., – எம்.எல்.ஏ., ஊர்வசி அமிர்தராஜ் மீண்டும் போட்டியிடுகிறார்.

அவர் நேற்று இருவப்பபுரம் காடோடிபனை பகுதியில் ஓட்டு சேகரிப்பிற்காக சென்றார். கிராம மக்கள் திடீரென அவரது வாகனத்தை முற்றுகையிட்டனர்.

பிரசார வாகனத்தை விட்டு கீழே இறங்கிய அமிர்தராஜிடம், ‘கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் பகுதிக்கு என்ன செய்தீர்கள்? இந்த பகுதியில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?’ என கேள்வி மேல் கேள்வி கேட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

‘எங்கள் பகுதிக்கு ஓட்டு கேட்டு வராதீர்கள்’ என அவரை அனுப்பி வைத்தனர்.

கிராம மக்கள் கூறுகையில், ‘கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்முறையாக எங்கள் ஊருக்கு, இப்போதுதான் எம்.எல்.ஏ., வந்துள்ளார். நாங்கள் போட்டோவில் தான் இவரை பார்த்துள்ளோம்’ என்றனர்.

Source link