ஐபிஎல் தொடர்களில் சேசிங் கிங்ஸ் ஆன பஞ்சாப் கிங்ஸ்!

சேசிங்கின் எந்தக் கட்டத்திலும் பஞ்சாப் தோற்று விடும் என்ற நிலையே இல்லை. சிஎஸ்கே பவுலிங் எந்தவித பிரஷரையும் உருவாக்கவில்லை. ராகுல் சாஹர் வந்தார் ஸ்ரேயஸ் அய்யார் 2 சிக்சர்களை விளாசி பிறகு 26 பந்துகளில் அரைசதம் விளாசினார். அதன் பிறகே பஞ்சாபைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

ஷிவம் துபேவுக்கு ஓவர் கொடுக்கவில்லை. மேட் ஹென்றி, கலீல் அகமட், அன்ஷுல் காம்போஜ், ராகுல் சாஹர் எல்லோருக்கும் செம சாத்து நடந்தது. நூர் அகமது விக்கெட் எடுப்பது போலவே வீசவில்லை. சிஎஸ்கே அடுத்த போட்டியை ஆர்சிபி அணியுடன் பெங்களூரில் ஆடுகிறது. ஆட்டத்திறன், பவுலிங், உத்தி என்று சிஎஸ்கே பெரிய அளவில் மேம்பட்டாலே தவிர கோலியின் ஆர்சிபியை வீழ்த்துவது கடினமே.

Source link