ஐபிஎஸ் அதிகாரிகள் ட்ரான்ஸ்பர்: சிவகங்கை, தூத்துக்குடி, கிரைம் பிரிவு எஸ்.பிக்கள் இடமாற்றம் – ips officers transfer with crime branch sivagangai thoothukudi sps ramanathapuram asp

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பான அறிவிப்பு சற்றுமுன் வந்திருக்கிறது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் எஸ்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அதிகாரிகள் பணியிடமாற்றம் தொடர்பான விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. கடந்த 60 ஆண்டுகளாக திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளே மாறி மாறி ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளன. எனவே இவர்களுக்கு சாதகமான அதிகாரிகள் அதிகமாக இருக்கக் கூடும். இது தவெக அரசு செயல்படுவதில் சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

தவெக அரசு எடுக்கும் நடவடிக்கை

எனவே திறமையான அதிகாரிகளை தேர்வு செய்து, தங்களுக்கு சரியாக வேலை செய்யக்கூடியவர்களை அடையாளம் கண்டு நியமித்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் பணியிடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் கே.மணிவாசன் சற்றுமுன் வெளியிட்டுள்ள உத்தரவில், 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்க ஊழியர்களுக்கு உத்தரவு போட்ட கிம்!முழு விவரம்

5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

வ.எண் அதிகாரியின் பெயர், தற்போதைய பணியிடம் புதிய பணியிடம் 1 எம்.விஜயலட்சுமி ஐபிஎஸ், டிஐஜி, ஆயுதப்படை, திருச்சி டிஐஜி, ஹோம் கார்ட்ஸ், சென்னை 2 ஆர்.சிவ பிரசாத் ஐபிஎஸ், எஸ்.பி, சிவகங்கை எஸ்.பி, தூத்துக்குடி 3 அபிஷேக் குப்தா, ஐபிஎஸ், எஸ்.பி, தூத்துக்குடி எஸ்.பி, சிவகங்கை 4 டி.சண்முக பிரியா ஐபிஎஸ், எஸ்.பி, மத்திய மண்டலம், கிரைம் பிரிவு சிஐடி, சென்னை எஸ்.பி, ஊழல் எதிர்ப்பு மற்றும் கண்காணிப்பு, மேற்கு சரகம், சென்னை 5 பி.ஆர்.மீனா ஐபிஎஸ், ஏ.எஸ்.பி, ராமேஸ்வரம் துணை டிவிஷன், ராமநாதபுரம் ஏ.எஸ்.பி, அலுவல பணிகள் தானியங்குமயமாதல், கணினிமயமாக்குதல், காவல்துறை தலைமையகம், சென்னை

யார் இந்த சிவ பிரசாத் ஐபிஎஸ்?

2016ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச்சை சேர்ந்தவர். தமிழ்நாடு கேடரில் தேர்ச்சி பெற்றார். சொந்த மாநிலம் கர்நாடகா. பொறியியல் பட்டதாரி. முன்னதாக மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் எஸ்.பியாக பணியாற்றினார். கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட நிலையில், சரியாக ஓராண்டு கழித்து தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

யார் இந்த அபிஷேக் குப்தா ஐபிஎஸ்?

2019 ஐபிஎஸ் பேட்ச். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். தமிழ்நாடு கேடரில் தேர்ச்சி பெற்றவர். சட்டப் படிப்பு முடித்துவிட்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்துள்ளார். முன்னதாக திண்டிவனம் ஏஎஸ்பி, திருப்பூர் எஸ்.பி, புதுக்கோட்டை எஸ்.பி ஆகிய பதவிகளை வகித்தவர். கடந்த மே 22ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இரண்டு மாதங்களில் மீண்டும் ஒரு பணியிடம் வந்திருக்கிறது. தற்போது சிவகங்கை மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த சண்முகப் பிரியா ஐபிஎஸ்?

தமிழ்நாட்டை சேர்ந்தவர். 2016ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச். 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சென்னை மத்திய மண்டல கிரைம் பிரிவில் எஸ்.பியாக பணியாற்றி வந்தார். முதலில் மாநில அரசின் குரூப் ஒன் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று காவல் உயர் அதிகாரியாக பணியிடம் பெற்றார். சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக அரசின் பரிந்துரையின் அடிப்படையில் யுபிஎஸ்சி தேர்வு குழு மதிப்பீடு செய்து ஐபிஎஸ் பணிக்கு பதவி உயர்வு அளித்து நியமிக்கப்பட்டார்.

Source link