ஐபேக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனையின்போது ஒரு மாநில முதல்வர் உள்ளே நுழையலாமா?

இது தொடர்​பாக சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட கோரி அமலாக்கத் துறை தாக்​கல் செய்த ரிட் மனுவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் பிர​சாந்த் குமார் மிஷ்​ரா, என்​.​வி. அஞ்​சரியா அடங்​கிய அமர்வு விசா​ரித்து வரு​கிறது.

இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்த போது, மேற்கு வங்க அரசின் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் ஷியாம் திவான் ஆஜராகி, “மத்​திய அரசின் அமைப்​பான அமலாக்​கத் துறை போன்ற அமைப்​பு​கள் மாநில அரசுக்கு எதி​ராக ரிட் மனு தாக்​கல் செய்ய அனு​ம​திப்​பது கூட்​டாட்சி அமைப்​புக்கு ஆபத்​தாகி​விடும். இந்த விவ​காரத்​தில் அமலாக்​கத் துறைக்கு எந்த அடிப்​படை உரிமை​யும் இல்​லாமல் ரிட் மனு தாக்​கல் செய்ய முடி​யாது. இது சிபிஐ, போதை பொருள் தடுப்பு பிரிவு, வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரகம் ஆகிவற்​றுக்​கும் பொருந்​தும்” என்று வாதிட்​டார்.

Source link