ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா அபாரம்

கவுகாத்தி: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் ஒடிசா அணி 4-1 என, வடகிழக்கு யுனைடெட் அணியை வீழ்த்தியது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. அசாமின் கவுகாத்தியில் நடந்த லீக் போட்டியில் வடகிழக்கு யுனைடெட், ஒடிசா அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய ஒடிசா அணி 4-1 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது. ஒடிசா அணிக்கு ராகுல் (6, 65வது நிமிடம்), சுபம் (25வது) கைகொடுத்தனர். வடகிழக்கு யுனைடெட் அணிக்கு ஒரு கோல் (10வது நிமிடம்) அடித்த மகார்டன் நிக்சன், ஒரு ‘சேம்சைடு’ கோல் (68வது) அடித்து ஏமாற்றினார்.

இதுவரை விளையாடிய 4 போட்டியில், ஒரு வெற்றி, 2 ‘டிரா’, ஒரு தோல்வி என, 5 புள்ளிகளுடன் ஒடிசா அணி 9வது இடத்துக்கு முன்னேறியது. இரண்டாவது தோல்வியை பெற்ற வடகிழக்கு யுனைடெட் அணி 6 புள்ளிகளுடன் (ஒரு வெள்ளி, 3 ‘டிரா’) 7வது இடத்தில் நீடிக்கிறது.

கொல்கட்டாவில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் மோகன் பகான், மும்பை அணிகள் மோதின. இதில் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Source link