பெங்களூரு: பெங்களூரு, வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டி 1-1 என, ‘டிரா’ ஆனது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. நேற்று, பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதின. ஆட்டத்தின் 19வது நிமிடத்தில் பிரையன் சான்செஸ் ஒரு கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் பெங்களூரு அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட வடகிழக்கு அணிக்கு லால்ரின்ஜுவாலா லால்பியாக்னியா ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என, ‘டிரா’ ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
கேரள மாநிலம் கொச்சியில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் கேரளா, மும்பை அணிகள் மோதின. இதில் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் 2வது வெற்றியை பதிவு செய்தது.
