ஐ.நா: மேற்குக் கரையில் இஸ்ரேலின் ஒருதலைப்பட்ச முடிவுகளை 100க்கும் மேற்பட்ட நாடுகள், உலகளாவிய அமைப்புகளுடன் இணைந்து இந்தியா கண்டித்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் இஸ்ரேலின் ‘தன்னிச்சையான’ நடவடிக்கைகளைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் நேற்று (பிப்ரவரி 18)வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்தியாவும் இணைந்தது.
இந்தக் கூட்டறிக்கை இஸ்ரேலின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்று சுட்டிக்காட்டுகிறது. 1967 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளின் (கிழக்கு ஜெருசலேம் உட்பட) மக்கள் தொகை அமைப்பு அல்லது அந்தஸ்தை மாற்றும் முயற்சிகளை இந்தியா உள்ளிட்ட நாடுகள் நிராகரித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், அரபு லீக், ஆஸ்திரேலியா, ஜப்பான், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியா இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் வருகைக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது இஸ்ரேலுடனான உறவையும், பாலஸ்தீனத்திற்கான ஆதரவையும் சமநிலைப்படுத்தும் இந்தியாவின் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
