நிறுவனங்களுக்கு ஒப்புதல் நிறுவனங்கள் விலகல்
அதேநேரம், ‘ரேஸ் பவர் இன்ப்ரா, மதுார் ஐயர்ன் & ஸ்டீல், அர்ஜுன் ஜுவல்லர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை திரும்ப பெற்றுள்ளன.
புதிய பங்கு வெளியீட்டை
ஒத்திவைத்தது ‘போன்பே’
த ற்போதைய உலகளாவிய சூழலை கருத்தில் கொண்டு தனது பொதுப்பங்கு வெளியீட்டு முயற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ‘போன்பே’ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ.பி.ஓ., வாயிலாக கிட்டத்தட்ட 12,000 கோடி ரூபாய் நிதி திரட்ட இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்திருந்தது. இந்நிலையில், மேற்கு ஆசிய போர் காரணமாக உலகளாவிய பங்குச்சந்தைகள் கடும் பாதிப்பை சந்தித்து வரும் சூழலில், இவ்வளவு பெரிய தொகையை திரட்டுவது சவாலாக இருக்கும் என அந்நிறுவனம் கருதுகிறது. இந்தியாவில் புதிய பங்கு வெளியிடுவதற்கு தாங்கள் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சமீர் நிகம், சந்தை சீரானவுடன் மீண்டும் பணிகள் துவங்கப்படும் என கூறியுள்ளார்.
