ஒட்டாவா: கனடா பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபர்

ஒட்டாவா: கனடா பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபர் உயிரிழந்தார்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு பள்ளியில் மர்மநபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபர் உயிரிழந்தார். அவர் பெண் என போலீசார் தெரிவித்தனர். பெயர் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link