ஒப்பந்தம் போடாவிட்டால் மோசமான விளைவு ஏற்படும்: ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

வாஷிங்டன்: மத்திய கிழக்குப் பகுதிகளில் அமெரிக்கா படைகளை குவித்து வரும் நிலையில், அர்த்தமுள்ள ஒப்பந்தத்தை ஈரான் போட வேண்டும். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை அந்நாடு சந்திக்கவேண்டி இருக்கும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. ஈரானை மிரட்ட வேண்டும் என்பதற்காக மத்திய கிழக்குப் பகுதிகளில் ராணுவத்தை குவித்து வருகிறது. இதற்கும் சளைக்காத ஈரான், தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடி நிச்சயம் எனக்கூறி வருகிறது.

மத்திய கிழக்கில் போர் வேண்டாம் என அரபு நாடுகள் கூறுவதால், அமெரிக்கா ஈரான் இடையே மறைமுக பேச்சுவார்த்தை நடக்கிறது. இதற்கு ஓமன் மத்தியஸ்தம் செய்துவருகிறது.

இதனிடையே, ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்த அமெரிக்கப் படைகள் தயாராக உள்ளதாகவும், டிரம்ப் அனுமதி கிடைத்த உடன் தாக்குதல் துவங்கும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

இந்நிலையில் டிரம்ப் கூறியதாவது: ஈரான் உடன் அர்த்தமுள்ள ஒப்பந்தம் என்பது சாத்தியம் இல்லாதது என்பது கடந்த காலங்களில் நிரூபணம் ஆகி உள்ளது. அந்நாடு ஒப்பந்தம் போடாவிட்டல் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றார்.

Source link