ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா

27 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி 

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்தியா, தொடரையும் 1-க்கு 2 என இழந்தது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது. 388 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

2 மாதங்களில் 3 தொடர்களை இழந்த இந்திய ஆடவர் அணி 

கடந்த 2 மாதங்களில் மூன்று தொடர்களை இந்திய அணி அடுத்தடுத்து பறிகொடுத்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டி20 கிரிக்கெட்டில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர்களை இந்திய அணி இழந்தது. அதன் பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் நேற்று போராடி இழந்து அதிர்ச்சி கொடுத்தது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக ரோகித் சர்மா வரலாற்று சாதனை 

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர், 138 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம், லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்கிற சாதனையை படைத்துள்ளார். மேலும், லார்ட்ஸ் மைதானத்தில் அனைத்து வகை சர்வதேச போட்டிகளிலும் சதமடித்த மிக மூத்த இந்திய வீரராகவும் திகழ்கிறார்.

Source link