மீனவர் பிரச்னை உட்பட பல்வேறு விஷயங்களுக்காக, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி கடிதம் எழுதினாரே… அதற்கு பதில் வந்ததா?
மீனவர்கள் விஷயத்தில், அக்கறையின்றி மத்திய அரசு உள்ளது. மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக, மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குறிப்பாக, மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம், அவர்களை மீட்கக் கோரி, பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, முதல்வர் கடிதம் எழுதி வருகிறார்.
ஆனால், முதல்வர் எழுதும் கடிதங்களுக்கு, பதிலளிப்பதில்லை. நாங்கள் தொடர்ந்து, அழுத்தம் கொடுப்பதால்தான், அண்டை நாடுகளால் கைது செய்யப்படும் மீனவர்கள், விடுதலை செய்யப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட படகுகளுக்கு, தமிழக அரசின் சார்பில் இழப்பீடு வழங்குகிறோம்.
– அனிதா ராதாகிருஷ்ணன்
அமைச்சர், திமுக
