தமிழ்நாட்டில் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில், டிசம்பர் முதல் மே மாதம் வரை தேவைப்படும் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.41.50-க்கு கொள்முதல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே ரூ.37.50-க்கு மின்சாரம் வாங்கும் திட்டம் விமர்சனங்களைச் சந்தித்த நிலையில், தற்போது கொள்முதல் விலை உயர்வதால் மின் கட்டணம் அதிகரிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41.50-க்கு கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு எடுத்திருக்கிறது. டிசம்பர் முதல் மே மாதம் வரை தேவைப்படும் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.41.50 என்ற விலையில் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது.கடந்த முறை ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.37.50-க்கு தமிழக அரசு வாங்கத் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அதிக விலைக்கு கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது.
ரூ.37.50-ல் இருந்து ரூ.41.50 ஆக உயரும் மின் கொள்முதல் விலை!
ஏற்கனவே ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.37.50-க்கு கொள்முதல் செய்யத் திட்டமிட்டிருந்ததற்கே பலகட்ட விமர்சனங்கள் எழுந்தன. இந்தச் சூழலில், அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கினால் தமிழக அரசின் பட்ஜெட்டில் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், மின் கட்டணம் தாறுமாறாக உயரும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது.
வெளிச்சந்தையில் ரூ.47-க்கு மின்சாரம் வாங்கினால் என்ன ஆகும்?
வெளிச்சந்தையில் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.47-க்கு வாங்கினால், அது தமிழக அரசுக்கு நிர்வாக ரீதியாக மிகப்பெரிய சவால்களை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவுகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ள சூழலில், மின்சாரக் கட்டணமும் அதிகரித்தால் மக்கள் நிச்சயம் கடும் அவதிக்குள்ளாக வாய்ப்புள்ளது.
மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுமா?
தமிழ்நாட்டில் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில், தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வது அரசுக்கு முக்கியமான சவாலாக உள்ளது. அதே நேரத்தில், அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதால் ஏற்படும் நிதிச்சுமையை அரசு எவ்வாறு கையாளப்போகிறது என்பதும் முக்கியமான கேள்வியாக உள்ளது.
மின்சாரக் கொள்முதல் விலை உயர்வு தமிழக அரசின் நிதிநிலையிலும், எதிர்கால மின் கட்டணத்திலும் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. மின் கொள்முதல் செலவுகள் அதிகரித்தாலும், அதன் சுமை நேரடியாக மக்களின் மின் கட்டணத்தில் பிரதிபலிக்குமா என்பது அரசின் அடுத்தகட்ட முடிவுகள் மற்றும் மின்சாரக் கட்டண நிர்ணயத்தைப் பொறுத்தே அமையும்.
