ரிலீஸானது ஜனநாயகன்: ஜனநாயகன் படம் ஜனவரி மாதத்திற்கு பதில் இன்று காலை ரிலீஸாகியிருக்கிறது. 7 மாத காத்திருப்புக்கு பிறகு வந்திருக்கும் முதல்வர் ஜோசப் விஜய்யின் படத்தை பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டமாக உள்ளது. இந்நிலையில் டைட்டில் கார்டு விஷயத்தில் விஜய் பேச்சையும், அதே சமயம் அவர் ரசிகர்களின் பேச்சையும் கேட்டு செயல்பட்டிருக்கிறார் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா.
ஜனநாயகனில் நடித்தபோது தளபதி விஜய்யாக மட்டுமே இருந்தார் விஜய். ஆனால் அது ரிலீஸாவதற்குள் முதல்வர் ஆகிவிட்டார். இதையடுத்து டைட்டில் கார்டில் தமிழக முதல்வர் விஜய் என்று இருக்க வேண்டும், அதை பார்த்து நாங்கள் சந்தோஷப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர் வெங்கட் நாராயணாவிடம் தெரிவித்தார்கள் தளபதி ரசிகர்கள். சார், ஜனநாயகன் டைட்டில் கார்டில் முதல்வர்னு போடட்டுமா என விஜய்யிடம் கேட்டிருக்கிறார் வெங்கட் நாராயணா. ஆனால் விஜய்யோ அதெல்லாம் வேண்டாம் சார். வெறும் தளபதி போதும் என்று கூறிவிட்டார்.
ஜனநாயகன் டைட்டில் கார்டு: தளபதினு போட்டால் விஜய் மட்டும் சந்தோஷப்படுவார். முதல்வர் என்று போட்டால் தான் அவர் ரசிகர்கள் திருப்தி அடைவார்கள். இரண்டு பேரின் கோரிக்கைகளையும் நிறைவேற்றி அனைவரையும் சந்தோஷப்பட வைத்துவிடலாம் என முடிவு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஜோசப் விஜய் என டைட்டில் கார்டு போட்டுவிட்டார் தயாரிப்பாளர்.
அந்த டைட்டில் கார்டை பார்த்து விஜய் ரசிகர்கள் அப்படியொரு சந்தோஷப்பட்டிருக்கிறார்கள். விஜய் சொன்னதையும் செய்தாகிவிட்டது, தளபதியன்ஸ் கேட்டதையும் கொடுத்தாகிவிட்டது. ஆக ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டார் தயாரிப்பாளர். இதில் அல்டிமேட் என்னவென்றால் சட்டசபையில் நடந்த சம்பவத்தை டைட்டில் கார்டு விஷுவலாக பயன்படுத்தியிருக்கிறார்கள். விஜய் மாஸாக செய்த ஆக்ஷனை ஜனநாயகன்
டைட்டில் கார்டு விஷுவலாக வர அடடே இது நம்ம கணக்கிலேயே இல்லையே என்று ரசிகர்கள் சந்தோஷப்பட்டுள்ளனர்.
லீக்கால் பாதிப்பில்லை: ஜனநாயகன் லீக்கானாலும் அதை தியேட்டர்களில் தான் பார்ப்போம் என மாதக்கணக்கில் காத்திருந்த ரசிகர்கள் இன்று முதல் நாள் முதல் காட்சியை பார்க்க கிளம்பிவிட்டார்கள். விஜய்யை கடைசியாக பார்க்கும் வாய்ப்பை இழக்க முடியாது என்று கல்லூரி, அலுவலகங்களுக்கு லீவு போட்டுவிட்டு பலரும் தியேட்டருக்கு சென்றிருக்கிறார்கள். முன்னதாக சென்சார் சான்று பிரச்சனையில் சிக்கியபோது ஜனநாயகன் அப்டேட் கொடுக்காமல் தாங்கள் தயாரித்த பிற படங்களின் அப்டேட்டுகளை எக்ஸ் தளத்தில் கொடுத்து வந்தது கே.வி.என். ப்ரொடக்ஷன்ஸ்.
அதை பார்த்த விஜய் ரசிகர்கள் கடுப்பாகி, ஜனநாயகன் எனும் ஒரு படத்தை தயாரித்தது நினைவிருக்கிறதா என கேட்டு வந்தார்கள். இந்நிலையில் டைட்டில் கார்டை இன்று தியேட்டர்களில் பார்த்ததும் அந்த கோபம் எல்லாம் தீர்ந்து தயாரிப்பாளரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
வினோத் விபரம்: இதற்கிடையே பகவந்த் கேசரி படத்தை தமிழில் ரீமேக் செய்யுமாறு கேட்டுக் கொண்டதே விஜய் என்று தெரிவித்துள்ளார் ஹெச். வினோத். அவர் கூறிய பிறகு தான் பாலகிருஷ்ணா மாஸ் காட்டியிருந்த அந்த படத்தை பார்த்திருக்கிறார். பகவந்த் கேசரியை ரீமேக் செய்தபோதிலும் படத்தில் தன் டச்சை வைத்திருக்கிறார் வினோத்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
ஜனநாயகன் படத்தின் கடைசி 30 நிமிடங்களை கவனமாக பார்த்தால் வாழ்க்கை மேம்படும் என்றார். இந்நிலையில் ஜனநாயகன் பட செட்டில் தன்னை விமர்சித்த பிரகாஷ்ராஜை பார்த்த விஜய்யோ, ஓடிப் போய் செல்லம்னு அவரை ஹக் செய்தார் என வினோத் தெரிவித்தது தளபதி ரசிகர்களை வியக்க வைத்துவிட்டது.
Source link
