ஒரே தொகுதிக்கு ராமதாஸ், சசிகலா வேட்பாளர்கள் அறிவிப்பு

இந்த தேர்தலில் பா.ம.க., நிறுவனர் ராமதாசும், அனைந்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் சசிகலாவும் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக அறிவித்தனர்.

இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு எதுவும் நடக்காத நிலையில், கடந்த 29ம் தேதி, 23 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சசிகலா அறிவித்தார். அதில், மயிலாடுதுறையில் சுதாகர் போட்டியிடுவார் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, ராமதாஸ் நேற்று முன்தினம் அறிவித்தார். அதில், மயிலாடுதுறையில் பாக்கம் சக்திவேல் போட்டியிடுவார் என கூறப்பட்டுள்ளது. ஒரே தொகுதிக்கு இருவரும் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்துள்ளதால், ராமதாஸ் — சசிகலா கட்சி கூட்டணி முறிந்து விட்டதா என, கேள்வி எழுந்துள்ளது.

Source link