ஒரே நாளில் இருமுறை வீழ்ச்சி: தங்கம் விலை ரூ.5,360 குறைவு!

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 2 முறை குறைந்து, கிராம் ரூ.14,000-க்கு கீழாக சரிந்துள்ளது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,360 குறைந்து ஒரு பவுன் ரூ.1,11,200-க்கு விற்பனையாகிறது. தொடர் உச்சங்களில் மிரட்டிய தங்கம் விலையின் படிப்படியான சரிவு வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் மகிழ்ச்சியை தந்துள்ளது.

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கள்கிழமையன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.400 குறைந்து பவுன் ரூ.1,17,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று (மார்ச் 18) 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.14,570-க்கும், ஒரு பவுன் ரூ.1,16,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக இரண்டு முறை குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று (வியாழக்கிழமை) காலை கிராமுக்கு ரூ.270 குறைந்து ஒரு கிராம் ரூ.14,300-க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர், மாலை வேளையில் கிராமுக்கு மேலும் ரூ.400 குறைந்து ஒரு கிராம் ரூ.13,900-க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.670 குறைந்துள்ளது. அதேபோல் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,360 குறைந்து ஒரு பவுன் ரூ.1,11,200-க்கு விற்பனையாகிறது.

Source link