ஒரே நாளில் 25 கிராமங்களில் தீயாய் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்..!

ஒரே நாளில் 25 கிராமங்களில் தீயாய் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் ஓ.கே. சின்னராஜ்.

சிறுமுகை அடுத்த மூடுதுறை ஊராட்சியில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், இரவு 10 மணி வரை இடைவிடாது வாக்கு சேகரித்தார். அப்போது மக்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சி அமைந்ததும் நிலப்பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டு, வீடுகள் கட்டித் தரப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும் இரட்டை இலை சின்னத்திற்கு பெருவாரியான வாக்குகள் அளித்து தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்தப் பிரச்சாரத்தின் பொழுது அதிமுக கூட்டணிக் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Source link