ஒரே நாளில் 5 தொகுதிகளில் விஜய் பிரசாரம்- TN Assembly Election Vijay campaigns in 5 constituencies in a single day

தமிழக சட்டசபை தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொள்ள த.வெ.க தலைவர் விஜய் திட்டமிட்டு உள்ளார். இதற்காக தேர்தல் ஆணையத்திடம் விஜய், புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் ஆகியோர் நட்சத்திர பேச்சாளர்களாக பிரசாரம் செய்ய அனுமதி கோரப்பட்டு இருந்தது. தற்போது அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நாளை மறுநாள் முதல் சென்னை பெரம்பூரில் இருந்து த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தை தொடங்க இருக்கிறார். இதற்காக பெரம்பூரில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Source link