'ஒவ்வொரு கப்பலுக்கு 2 மில்லியன் டாலர்கள்' – ஹார்முஸ் முதல் யுரேனியம் வரை; ஈரானின் 10 நிபந்தனைகள்

அமெரிக்க நேரப்படி, இன்று இரவு 8 மணிக்கு ஈரான் மீதான கடும் தாக்குதலுக்கு நேரத்தைக் குறித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அவர் வைத்திருக்கும் ஒரே நிபந்தனை ‘ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டும்’ என்பதுதான். இந்த நிபந்தனைக்கு ஈரானும் 10 எதிர் நிபந்தனைகளை விதித்துள்ளது. அவை என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.> மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும். > இந்தப் போர் நிறுத்தம் தற்காலிகமானதாக இல்லாமல், நிரந்தரமானதாக இருக்க வேண்டும். > ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வதற்கான ஒரு அமைப்பு வேண்டும்.ஹார்முஸ் ஜலசந்தி

> ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் உரிமையை அங்கீகரிக்க வேண்டும். > அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் (NPT) கீழ் யுரேனியத்தைச் செறிவூட்டுவதற்கான உரிமையை முறைப்படி அங்கீகரிக்க வேண்டும். > ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், பிற நாடுகளும் விதித்துள்ள தடைகளை நீக்க வேண்டும். > லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். > இதற்கு பதிலாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கும். ஆனால், அங்கே நின்றுகொண்டிருக்கும் ஒவ்வொரு கப்பலும் அந்த வழியாகச் செல்ல கட்டணமாக 2 மில்லியன் டாலர்கள் வசூலிக்கப்படும். இந்தப் பணம் ஓமனுடன் பகிரப்படும். > இந்த நிதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட கட்டமைப்புகளைச் சரி செய்ய பயன்படுத்தப்படும். நேரடி நஷ்ட ஈடிற்குப் பதிலாக, இப்படி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. > எதிர்காலத்தில் ஈரான் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படாது என்பதற்கான உறுதி.

Source link