சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார். அதிமுக தேர்தல் அறிக்கையில் 297 அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. ஏற்கனவே இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்த நிலையில், இப்போது முழுமையான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி
> மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்க 25,000 ரூபாய் மானியம்.
> அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலை இல்லா ஃபிரிட்ஜ்
> ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ பருப்பு, எண்ணெய் இலவசம்
> முன்னாள் படைவீரர் பிள்ளைகளுக்கு அரசு, கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை பயில 1 சதவிகிதம் இடஒதுக்கீடு
> ஊரக வேலைத்திட்டம் 150 நாட்களுக்கு உயர்த்தப்படும்
> வங்கிகளில் பெற்ற கல்வி கடன் தள்ளிபடி செய்யப்படும்
> தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த மதுக்கடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை
> ஜல்லிக்கட்டின்போது காயமடைந்தால் 2 லட்சம்; உயிரிழந்தால் 10 லட்சம் வழங்கப்படும்
> கோயில்களில் அன்னதானத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
> ராணுவத்தில் உயிர்நீத்த, படை வீரர் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம்
> வாழ்வாதார உதவியாக ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்
> வீடு இல்லாத குடும்பங்களுக்கு ‘அம்மா இல்லம்’ திட்டத்தின் பெயரில் வீடு கட்டித்தரப்படும் என்பது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
More details will be updated here..!
