ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘நூறுசாமி’ திரைப்படம்

வரும் 31ஆம் தேதி Z-5 தளத்தில் வெளியாகிறது 

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா, கருணாஸ், பாலாஜி சக்திவேல் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘நூறுசாமி’ திரைப்படம் வரும் 31ஆம் தேதி Zee-5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. கணவனை இழந்த அம்மாவுக்கு தனது சொந்த மகன்களே முன்னின்று இரண்டாவது திருமணம் நடத்தி வைக்க போராடும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவான ‘நூறுசாமி’ வணிக ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

‘TOXIC’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு 

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘TOXIC’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் இடம் பெற்றுள்ள யாஷின் லுக், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நயன்தாரா,கியாரா அத்வானி, ருக்மினி வசந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேவிஎன் பிரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி PAN INDIA திரைப்படமாக வெளியாகிறது.

இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த திரைப்படம் 

இயக்குநர் மணிரத்னம் தனது அடுத்த திரைப்படத்துக்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார். தக் லைப் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவியை வைத்து புதிய திரைப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில், அத்திரைப்படத்துக்கான படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Source link