மேம்பட்ட ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய சேவையை வழங்கும் வகையில், சாட் ஜி.பி.டி.,யை உருவாக்கிய ‘ஓப்பன் ஏ.ஐ.,’ நிறுவனத்துடன் டி.சி.எஸ்., நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
டாடா குழுமத்தின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த நவீன மாற்றங்களை கொண்டு வர இந்த ஒப்பந்தம் உதவும்.
ஆவணங்களை கையாளுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் ஏஜென்டிக் ஏ.ஐ., தொழில்நுட்பம் மற்றும் அதற்கான அடிப்படை உட்கட்டமைப்புகளை உருவாக்குவதில் இந்த கூட்டணி கவனம் செலுத்தும்.
இந்தியாவின் தலைமைத்துவத்தை இந்த ஒப்பந்தம் மேலும் வலுப்படுத்தும் என ஓப்பன் ஏ.ஐ., தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் மற்றும் டாட்டா குழும தலைவர் என். சந்திரசேகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒப்பந்த அறிவிப்பு வெளியான நிலையில், டி.சி.எஸ்., பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 2 சதவீதம் வரை உயர்ந்தது. பின்னர் வர்த்தக நிறைவில் 0.74 சதவீதம் குறைந்து முடிந்தது.
