ஓமன் கடல் பரப்பில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்; இந்தியர் உயிரிழப்பு

மஸ்கட்: ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் இடையே மோதல் போக்கு தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஓமன் கடற்பரப்பில் எண்ணெய் டேங்கர் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இந்திய பணியாளர் ஒருவர் உயிரிழந்தார்.

சரக்கு போக்குவரத்து மேற்காசிய பகுதிகளை, அரபிக் கடலுடன் இணைக்கும் குறுகிய நீர்வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி, ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையே உள்ளது. இதன் வழியாக டேங்கர் கப்பல்களின் மூலம் எண்ணெய் சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இது, உலகளவில் 20 சதவீத எண்ணெய் நுகர்வை நிறைவு செய்கிறது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் கூட்டுத் தாக்குதல் நடத்தியதால், இந்நீர்வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதன் இடையே மார்ஷல் தீவுகளின் பதிவு செய்யப்பட்ட எம்கேடி வியோம் டேங்கர் கப்பல் மீது ஓமன் கடற்பரப்பில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில், இந்தியாவை சேர்ந்த பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

Source link