புதுடில்லி, ‘லோக்சபா சபாநாயகர் பதவியிலிருந்து ஓம் பிர்லாவை நீக்க எதிர்க்கட்சிகள் மோசமான முயற்சியை மேற்கொண்டுள்ளன’ என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு, டில்லி சட்டசபை சபாநாயகர் விஜேந்தர் குப்தா கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ஜனநாயகத்தின் துாணாக விளங்கும் பார்லிமென்டில், நடுநிலைமையை கடைபிடித்து வருவதில், சபாநாயகர் முன்னுதாரணமாக திகழ்கிறார் என விஜேந்தர் குப்தா பாராட்டியுள்ளார்.
