தமிழ்நாடு காவல்துறை கொடிநாளில் பயன்படுத்தப்பட்ட சீருடை பேட்ஜில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்ற விவகாரம் பெரும் அரசியல் சர்ச்சையாக வெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில், திராவிட மாடல் அரசை நேரடியாகக் கண்டித்து தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரப்பூர்வ ஐடி விங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஆட்சியிலும் இதே நிலைதான்: TVK அதிரடி குற்றச்சாட்டு
தமிழ்நாடு காவலர்களின் சீருடையில் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே கொண்ட பேட்ஜை அணிய வேண்டும் என்று பல ஆண்டுகளாக ஒன்றிய அரசு அழுத்தம் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. திராவிட மாடல் அரசு இதனை ஒருபோதும் ஏற்கவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழக வெற்றி கழகம் தனது அறிக்கையை முன்வைத்துள்ளது.
தற்போது அறிக்கை வெளியிட்டுள்ள தீயசக்திக்கு, தங்களது சொந்த ஆட்சிக்காலத்திலும் இதே பேட்ஜ்தான் பயன்படுத்தப்பட்டது என்ற அடிப்படை விவரம் கூட தெரியவில்லை என்று TVK ஐடி விங் தனது பதிவில் மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளது.
“அரைகுறை குறிப்புகளை வைத்து அவதூறு”
உண்மை என்ன, எப்போது என்ன நடந்தது என்று யாரிடமும் தீர விசாரிக்காமல், கொத்தடிமைகள் கொடுக்கும் அரைகுறை குறிப்புகளை மட்டுமே வைத்துக்கொண்டு சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாகத் தற்போதைய ஆளுங்கட்சித் தரப்பை தமிழக வெற்றி கழகம் சாடியுள்ளது. மேலும், முறையான புரிதல் இல்லாமல் பேசுவதால்தான் அவர்கள் ‘அரசியல் மூர்த்தி’யாகவும், ‘தலைமை தத்தி’யாகவும் வலம் வருவதாகவும் அந்தப் பதிவில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
“ஓய்வெடுங்கள் Sweet Uncle!”
தமிழகத்தில் தற்போது எல்லாமே சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது என்று கிண்டலடிக்கும் தொனியில் குறிப்பிட்டுள்ள TVK ஐடி விங், தற்போதைய ஆளும் தரப்பின் முக்கியப் புள்ளியைக் குறிப்பிட்டு, “எல்லாம் நன்றாகவே நடக்கிறது, ஓய்வெடுங்கள் Sweet Uncle!” எனப் பதிவிட்டு இந்த அரசியல் மோதலை மேலும் சூடாக்கியுள்ளது.
காவல்துறை கொடிநாள் பேட்ஜில் தமிழ் மொழி விடுபட்ட விவகாரம் தொடர்பாக திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகிய இரு தரப்பிற்கும் இடையே எழுந்துள்ள இந்த சமூக வலைதள மோதல், தமிழக அரசியல் களத்தில் தற்போதைய பரபரப்பான விவாதப் பொருளாக மாறியுள்ளது.
தவெக ஐடி விங் பதிவு
விவரம் பின்வருமாறு,
காவல் துறை கொடி நாளில், இந்தியும் ஆங்கிலமும் மட்டும் இடம்பெற்றுள்ள badge-ஐ தமிழ்நாடு காவலர்கள் சீருடையில் அணிய வேண்டும் என்று பல ஆண்டுகளாக ஒன்றிய அரசு அழுத்தத்தை கொடுத்த நிலையில், திராவிட மாடல் அரசு ஒருபோதும் அதை ஏற்காமல் இருந்தது என்று இன்று அறிக்கை வெளியிட்டுள்ள தீயசக்திக்கு, அவர்கள் ஆட்சியிலும் அதே badgeதான் பயன்படுத்தப்பட்டது என்று விவரம் தெரியவில்லை.
என்ன நடந்தது, எப்போது நடந்தது என்று யாரிடமும் கேட்காமல், கொத்தடிமைகள் கொடுக்கும் அரைகுறை குறிப்புகளை வைத்து அவதூறு பரப்புவதால்தான் அரசியல் மூர்த்தியாக வலம் வருகிறார் தலைமை தத்தி.
எல்லாம் நன்றாகவே நடக்கிறது,
ஓய்வெடுங்கள் Sweet Uncle! என பதிவு
