கஞ்சா புழக்கம்: அமைச்சர் சுப்பிரமணியன் ஒப்புதல்

திருவள்ளூர்: திருவள்ளூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், பேட்டி அளித்த அமைச்சர் சுப்பிரமணியன், ”தமிழகத்தில் கஞ்சா பயிரிடுவது முழுதும் தடுக்கப்பட்டு விட்டது.

” ஆனால், அண்டை மாநிலங்களிலிருந்து கஞ்சா கடத்தப்பட்டு தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளது. அதனை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,” என்றார்.

தமிழகத்தில் கஞ்சா புழக்கமே இல்லை என்று கூறிவந்த அமைச்சர், முதல் முறையாக கஞ்சா புழக்கம் உள்ளது என, ஒப்புக் கொண்டது, விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Source link