ரிசர்வ் வங்கி நாடு முழுவதும், டிஜிட்டல் முறையில் கடன் வழங்குவதற்காக யு.எல்.ஐ., எனும் ‘யுனிபைடு லெண்டிங் இன்டர்பேஸ்’ வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த வசதியானது, கடன் வாங்குபவரின் நில ஆவணங்கள், பான் கார்டு விபரங்கள், ஜி.எஸ்.டி., மற்றும் வங்கி பரிவர்த்தனைகள் என அனைத்தையும் ஒரே இடத்தில் மின்னணு முறையில் ஒருங்கிணைக்கும்.
ஏற்கனவே சோதனை அடிப்படையில் கிட்டத்தட்ட 65,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 14 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
விரைவில் இது அனைத்து வங்கிகளிலும் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள் கடன் வாங்க வங்கி வாசலில் காத்து கிடக்க தேவையில்லை
அனைத்தும் ‘டிஜிட்டல்’ மயம் என்பதால், பைல்களை துாக்கிக் கொண்டு அலைய வேண்டியதில்லை
பல வாரங்கள் இழுத்தடித்த கடன் நடைமுறைகள், இனி சில நிமிடங்களில் முடியக்கூடும்
நில ஆவணங்களை ஆன்லைன் மூலமே சரிபார்க்க முடியும் என்பதால், கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கடன் கிடைப்பது எளிது
முறையான ஆவணங்கள் இல்லாத சிறு, குறு தொழிலதிபர்கள் தங்களின் ‘ஜி.எஸ்.டி.,’ கணக்குகளை வைத்தே இனி சுலபமாக கடன் பெறலாம்
இடைத்தரகர்கள் தொல்லை ஒழியும், வட்டி விகிதங்களும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
