கடலுார்: கடலுார் முல்லை கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் சிறப்பு விற்பனை,

கடலுார்: கடலுார் முல்லை கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் சிறப்பு விற்பனை, கடந்த பிப். 1ம் தேதி துவங்கியது. இந்த சிறப்பு விற்பனை, வரும் மார்ச் 28ம் தேதி வரை நடக்கிறது.

இது குறித்து மண்டல மேலாளர் மாணிக்கம் கூறியதாவது:

தமிழகம் முழுதும் உள்ள கைத்தறி நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பட்டுசேலைகள், பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், பருத்தி சட்டைகள், துண்டுகள், திரைச்சீலைகள் போன்ற ரகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

சிறப்பு தள்ளுபடியாக, இரண்டு பொருட்கள் வாங்கினால் ஒரு பொருள் இலவசமாக வழங்கப்படுகிறது. இரண்டின் விலையில் மூன்று பொருட்கள் வழங்கப்படுவதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாங்கிச்செல்கின்றனர். கோ-ஆப்டெக்ஸின் மாதாந்திர சிறுசேமிப்பு திட்டத்தின் படி வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப மா தந்தோறும் 300 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை 11 மாத தவணைகளை மட்டும் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படுகிறது. 12வது மாத தவணையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்தும். இந்த கூடுதல் சேமிப்பில், பருத்தி மற்றும் பட்டு ரக துணிகளை வாங்கி பயன்பெறலாம் எனதெரிவித்தார்.

துணை மண்டல மேலாளர் பிரேம்குமார்உடனிருந்தார்.

Source link