ஈரான் போருக்கு மத்தியில் அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.சொல்லப் போனால், இந்தப் போருக்குப் பின் தான், அமெரிக்க டாலரின் மதிப்பு பெரியளவில் வலுவடைந்து வருகிறது.இதற்கான ‘4’ காரணங்கள் என்ன?> போர் பதற்றத்தில் காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி நகர்கிறார்கள்.அப்படியான பாதுகாப்பு முதலீடுகளில் ‘அமெரிக்க கருவூலப் பத்திரமும்’ ஒன்று.ஆக, முதலீட்டாளர்கள் அமெரிக்காவின் கருவூலப் பத்திரம் உள்ளிட்ட அமெரிக்க சார்ந்த முதலீடுகளுக்கு செல்லும்போது, அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவாகிறது.us dollar – usd – அமெரிக்க டாலர்> இந்தியாவைப் போன்று எரிசக்திக்கு இன்னொரு நாட்டை சார்ந்திருக்கும் நாடல்ல அமெரிக்கா.அமெரிக்காவே எரிசக்தியின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்.அதனால், கச்சா எண்ணெய் மீதான அழுத்தம் அமெரிக்க டாலரை எட்டவில்லை.> எரிசக்தியின் விலை அதிகரித்து வருகிறது. இதனால், பணவீக்கம் அதிகரிக்கலாம் என்கிற அச்சம் நிலவி வருகிறது.இதனால், இப்போதைக்கு அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைக்காது.இந்த எதிர்பார்ப்பும் டாலரின் மதிப்பை வலுவாக்கி உள்ளது.> இப்போது நிலவும் நிலையற்ற தன்மையால், உலக நாடுகளுக்கு அமெரிக்க டாலர் தேவை.காரணம், அது தான் உலகளாவிய நாணயம்.இதனாலும், நாடுகள் அமெரிக்க டாலர் பக்கம் திரும்பியுள்ளன. இதுவும் அதன் மதிப்பை உயர்த்துகிறது.
Source link
