தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாகப் பரப்புரையில் இறங்கியுள்ளன. இதனிடையே, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கிறது. விடுமுறை நாட்கள் நீங்கலாக வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாளே இருப்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் பிரச்சாரத்திலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் இன்று பாஜக வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் பல்வேறு இழுபறிக்கு மத்தியில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. வெளியான பட்டியல் படி விளவங்கோடு-பிரவீன், கிள்ளியூர்-ராஜேஷ்குமார், சங்கரன்கோவில்-சங்கை கணேசன், அம்பாசமுத்திரம்-வி.பி.துரை, நாங்குநேரி-ரூபி மனோகரன், குளச்சல் தாரகை கத்பட், சோளிங்கர்-முனிரத்னம், கிருஷ்ணகிரி-செல்வகுமார், பொன்னேரி-துரை சந்திரசேகர், ஸ்ரீபெரும்புதூர்-செல்வப்பெருந்தகை, உதகை-ராமச்சந்திரன், ஈரோடு கிழக்கு-கோபிநாத் பழனியப்பன், அறந்தாங்கி-ராமச்சந்திரன், கவுண்டம்பாளையம்-சூரியபிரகாஷ், சிங்காநல்லூர்-ஸ்ரீநிதி நாயுடு, துறையூர்-விச்சு லெனின் பிரசாத், திருவாடானை-ராம.கருமாணிக்கம், ஸ்ரீவைகுண்டம்-ஊர்வசி அமிர்தராஜ், வேளச்சேரி-அசன் மவுலானா, ஊத்தங்கரை-குப்புசாமி, பென்னாகரம்-ஜி.கே.எம்.தமிழ்குமரன், ஆத்தூர்-அர்த்தனாரி, கடலூர்-சந்திரசேகரன், மயிலாடுதுறை- ஜமால் யூனிஸ் முகமது, காரைக்குடி-மாங்குடி, உசிலம்பட்டி-சரவணகுமார், சிவகாசி-கணேசன் அசோகன் என மொத்தம் 27 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள மேலூர் தொகுதிக்கு விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பாமகவின் ராமதாஸ் தரப்பு நிர்வாகியான ஜி.கே.மணியின் மகனும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜி.கே.எம்.தமிழ்குமரனுக்கு காங்கிரசில் பென்னாகரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் அண்மையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி.செல்வம் கட்சியில் சேர்ந்த அடுத்த நாளே சேப்பாக்கம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
