கட்சியில் சேர்ந்த 6-வது நாளே சீட்..!

கடந்த வாரம் தான் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தமிழ்க்குமரன் , அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலை சந்தித்து கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்தாலும் இவர் பாமக அரசியல் கட்சியின் பின்னனியை சார்ந்தவர். இவரது தந்தை ஜி.கே.மணி பாமக(ராமதாஸ் பிரிவு)வின் கௌரவ தலைவராக உள்ளார். பொன்னாகரம் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பலமுறை இந்த தொகுதியில் போட்டியிட்டு 3 முறை மட்டும் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் கட்சியில் சேர்ந்த 6 நாளிலே , தமிழ்க்குமரனுக்கு சீட் கொடுத்தது காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சீட் ஒதுக்குவது தொடர்பாக , காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி எம்.பி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது தமிழ்க்குமரன் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னாகரம் தொகுதியில் வேட்பாளராக களமிறங்க உள்ளார்.

Source link