கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி வர்மா ராஜினாமா..!

டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய சர்ச்சையில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

2025-ல் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்தபோது நேரிட்ட தீ விபத்தில், அவர் வீட்டில் கணக்கில் வராத பணம் கண்டெடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர் நதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது உள் விசாரணை மற்றும் பதவி நீக்க நடவடிக்கை எடுக்கப்படவிருந்த நிலையில் இந்த ராஜினாமா நடந்துள்ளது.

இந்த விவகாரத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதி வர்மா மறுத்து வந்தாலும், சர்ச்சைகள் காரணமாக அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Source link