கோபி: ”கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,” என, அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நிருபர்களிடம் அமைப்பின் மாநில தலைவர் பிரபு நேற்று கூறியதாவது:
கட்டுமான பொருட்கள் 30 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளதால், சிமென்ட், கம்பி, பி.வி.சி., பைப், சுவிட்ச் ஆகிய கட்டுமான பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
தமிழகத்தில் இன்ஜினியர்கள், ஒப்பந்ததாரர்கள், தலா, 25,000 பேர், அதன் தொழிலாளர்கள் என, 50 லட்சம் பேர் உள்ளனர். விவசாயத்துக்கு அடுத்ததாக கட்டுமானம் தான் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது.
கம்பி, சிமென்ட் என கட்டுமான பொருட்களின் விற்பனை நிறுவனங்கள், 30 சதவீதம் விலையை உயர்த்தியுள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்து, விலை உயர்வை சமநிலைப்படுத்த வேண்டும். விலை உயர்வை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
