கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது மட்டுமே, மனைவிக்கு இழைக்கப்பட்ட கொடுமையாக கருத முடியாது – உயர்நீதிமன்றம் – extramarital affair its not an injustice for wife says chennai highcourt

மனைவி மற்றும் குழந்தை தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததே தற்கொலைக்குக் காரணம் எனக் கூறி, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498A (மனைவியைக் கொடுமைப்படுத்துதல்) மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் (பிரிவு 306) ஆகிய பிரிவுகளின் கீழ் கணவன் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் கணவனை விடுதலை செய்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஆண்களும் பெண்களும் திருமண உறவில் வெவ்வேறாக தங்களது அன்பை வெளிக்காட்டுவர். சில பெண்கள் தங்களது கணவன் மீதுள்ள அதீத அன்பால் அன்புத் தொல்லைகள் செய்வதை நாம் அறிந்து இருக்கிறோம். ஆனால் திருமணத்தை மீறிய உறவில் உள்ள ஆண்களுக்கு மனைவி, குழந்தைகளை பற்றிய கவலை முற்றிலுமாக இல்லை என கூறமுடியாது. சூழல், சில சமயங்களில் தங்களது அன்பை வெளிக்காட்டும் முறை வேறுபடுகிறது.

Extramarital Affair குற்றவியல் கொடுமையாக மாறாது

கணவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்தைத் தாண்டிய தொடர்பு (Extramarital Affair) இருப்பது, சட்டப்படி ஒரு தார்மீகத் தவறாகவோ அல்லது விவாகரத்து கோருவதற்கான சிவில் குற்றச்சாட்டாகவோ இருக்கலாம். ஆனால், அந்தத் தொடர்பு மட்டுமே, பிரிவு 498A-ன் கீழ் மனைவிக்கு இழைக்கப்பட்ட குற்றவியல் கொடுமையாக (Cruelty) தானாகவே மாறிவிடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர்மோகன் தெரிவித்துள்ளார்.

கணவனின் நடத்தை, மனைவியை தற்கொலைக்குத் தூண்டும் அளவிற்கு அல்லது அவருக்கு கடுமையான உடல்/மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் கடுமையான சித்திரவதையாக இருந்ததா என்பதை அரசுத் தரப்பு நிரூபிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வெறும் கள்ளத்தொடர்பு மட்டுமே தற்கொலைக்குத் தூண்டியதற்கான முழுமையான குற்றவியல் ஆதாரமாகாது என்று உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது

அதீத அன்பு சந்தேகமாக மாறினால் ஆபத்து

கணவன் மனைவி மீதோ, மனைவி கணவன் மீதுள்ள அன்பு சில இடைவெளியில் நிற்க வேண்டும் என்று மனநல மருத்துவர்களும், குடும்பநல வழக்கறிஞர்களும் கூறுகின்றனர். தற்போது எதற்கு எடுத்தாலும் விவாகரத்து, உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று மிரட்டல் விடுப்பது திருமண வாழ்வில் சர்வ சாதாரணமாகி விட்டதாக கூறும் குடும்பநல வழக்கறிஞ்கர்கள், ஆழ்ந்து சந்திக்காமலும், நாம் ஒருவரை சார்ந்து வாழும் வாழ்க்கையே பெண்கள், சில ஆண்களை வாழ்க்கையே முடித்துக்கொள்ளும் தவறான முடிவுக்கு தள்ளப்படுவதாக கூறுகின்றனர்.

நிலுவையில் உள்ள குடும்பநல வழக்குகள் ஏராளம்

திருமண உறவில் விவாகரத்து வேண்டும் என்றால் குடும்பநல நீதிமன்றத்தையே அணுக வேண்டும். இப்போது உள்ள காலகட்டங்களில் எதற்கு எடுத்தாலும் விவகாரத்து வேண்டும். நடத்தையில் சந்தேகம் உள்ளிட்ட பல காரணங்களை அடுக்கி வழக்கு கட்டுகளும் நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கிறது.
உண்மையில் குடும்ப உறவில் உள்ள சிக்கலைதீர்க்கவே குடும்பநல நீதிமன்றங்கள் இருப்பதாகவும், நினைத்தவுடன் விவாகரத்து பெற்றுவிட முடியாது என்று குடும்பநல வழக்கறிஞர் சூர்யா தெரிவித்துள்ளார். திருமண உறவுகள் வலுப்படுத்தவே குடும்பநல நீதிமன்றங்கள் உள்ளதாகவும், இளம் தம்பதிகள் வாழ்க்கை பயணத்தை தொடங்குவதற்கு முன்பு பாதியில் முறித்துக்கொள்ள நினைப்பதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

உண்மையான காரணங்களுக்கு நிச்சயம் தீர்வு அளிக்கப்படும்

பெண்கள் மீதான தாக்குதல், துன்புறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் சித்ரவதை அனுபவிக்கும் பெண்களின் நிலையை கருத்தில் கொண்டு நீதிமன்றங்கள் விவாகரத்து வழங்குவதாக தெரிவித்துள்ள பேராசிரியர் சூர்யா, பொய் காரணங்களை கூறி அவ்வளவு எளிதாக விவாகரத்து பெற்றுவிட முடியாது என்றார். இந்த உரிமை ஆண்களுக்கும் பொருந்தும் என்று வழக்கறிஞர் சூர்யா தெரிவித்துள்ளார்.

உயிரை மாய்த்துக்கொள்ளக் கூடாது என்பதே விருப்பம்

பெண்கள் உயிரை தாங்களாகவே மாய்த்துக்கொள்ளக் கூடாது என்பது தான் நீதிமன்றத்தின் விருப்பம் என்றும், சில வழக்குகள் தங்களையே மனவேதனையில் தள்ளிவிடுவதாகவும் வழக்கறிஞர் சூர்யா சமயம் தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Source link