கணித உலகின் உயரிய விருது: 100 ஆண்டுகால புதிருக்கு விடை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்

வாஷிங்டன்,

உலக அளவில் கணிதத் துறையின் உயரிய விருதான ‘பீல்ட்ஸ் மெடல்’ அமெரிக்காவில் வழங்கப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதை, முதன்முறையாக 2 சீன அறிஞர்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். சீனாவின் யு டெங் மற்றும் சீனாவில் பிறந்த பெண் விஞ்ஞானி ஹாங் வாங் ஆகியோரே இந்த விருதை தட்டிச் சென்றுள்ளனர்.

இதன்மூலம் 90 ஆண்டுகால இந்த விருது வரலாற்றில், விருதைப் பெறும் 3-வது பெண்மணி என்ற பெருமையை ஹாங் வாங் பெற்றுள்ளார். 1900-ம் ஆண்டு ஜெர்மனி விஞ்ஞானி டேவிட் ஹில்பர்ட் முன்வைத்த வாயுக்களின் இயக்கம் குறித்த 100 ஆண்டுகால புதிருக்கு யு டெங் விடை கண்டுள்ளார்.

அதேபோல், 1917-ம் ஆண்டு ஜப்பான் விஞ்ஞானி சோய்ச்சி ககேயா எழுப்பிய கணித புதிருக்கு ஹாங் வாங் முப்பரிமாண வடிவில் தீர்வு கண்டு உலகை வியக்க வைத்துள்ளார். இவர்களுடன் அமெரிக்காவின் ஜான் பார்டன், கனடா வின் ஜேக்கப் சிம்மர்மன் ஆகியோரும் இந்த விருதை பெற்றுள்ளனர்.

Source link