கண்ணே கண்மணியே: “இது நான் இறைவனுக்காக எழுதிய பாடல்!” – மஃஷூக் ரஹ்மான் | வரித்துணையே 16 |mashook rahman kanne kanmaniye song varithunaiye 16 ar rahman

பாடலாசிரியர் மஃஷூக் ரஹ்மான், “நான் ‘தேரே இஷ்க் மெயின்’ திரைப்படத்தை இரண்டு ஆன்மாவுக்கான தேடலாகப் புரிந்துகொண்டேன். இன்று காதலில் பல பரிணாமங்கள் வந்துவிட்டன. இன்று அது கன்ஸ்யூமரிசமாகவும் வந்துவிட்டது.

நான் ஆசிரியராகவும் சில காலங்கள் இருந்தேன். அப்போது என்னுடைய மாணவர்களிடம் காதல் பற்றி நிறைய உரையாடியிருக்கிறேன். காதலை என்றுமே நாம் இறுக்கமாகப் பிடித்து வைத்திருக்கக்கூடாது. காதலில் எந்தவொரு விஷயத்தையும் சொந்தமாக்குவது முக்கியம் கிடையாது. பரஸ்பரம் புரிந்துகொள்வதுதான் காதல். இந்தத் திரைப்படத்தில் நாயகன் ‘நான் நேர்மையாகக் காதலிக்கிறேன்’ என்பதை வெளிப்படுத்துவார்.

Kanne Kanmaniye - Mashook Rahman

Kanne Kanmaniye – Mashook Rahman

இதில் கிளைமேக்ஸ் மிகவும் முக்கியமானது. நான் நிகழ்த்தும் தவறுகளை, என் மனைவி மூலமாகத்தான் நான் புரிந்துகொண்டேன். அப்படிதான் இந்தப் படத்தின் கிளைமேக்ஸில், அவர்கள் செய்த தவறைப் பரஸ்பரம் இருவரும் புரிந்துகொள்வார்கள்.

காதலில் ப்ளஸ் & மைனஸ் என இரண்டையும், இருவரும் புரிந்துகொண்டால், அதில் பிளவு என்றுமே ஏற்படாது. அதைதான் இந்தக் கதையும் உணர்த்துவதாக நான் புரிந்துகொண்டேன். இதைதான் படத்தின் நாயகனும் நாயகியும் வெளிப்படுத்தினார்கள்.

இதனைப் புரிதலில் வைத்துக்கொண்டுதான் ‘கண்ணே கண்மணியே’ பாடலை நான் எழுதினேன். முதலில் பாடல் வெளிவந்தபோது பெரியளவில் மக்களுக்குச் சென்று சேரவில்லை.

Source link