கனடா துப்பாக்கிச்சூடு விவகாரம்: இந்தியர்கள் 3 பேர் கைது

ஒட்டாவா:கனடாவில் குடியிருப்பு ஒன்றின் வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக இந்திய வாலிபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிப்ரவரி 1, அன்று அதிகாலை, பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் உள்ள கிரசண்ட் பீச் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வெளியே துப்பாக்கிச்சூடு நடந்தது, அதை தொடர்ந்து அங்கு தீயும் வைக்கப்பட்டது. அப்போது வீட்டில் ஆட்கள் இருந்தபோதிலும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக இன்று (பிப்ரவரி 3) இந்திய வாலிபர்கள்

3 பேரை சர்ரே போலீஸ் கைது செய்தனர்.

இது தொடர்பாக சர்ரே போலீஸ் அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:

பணப்பறிப்பு, மிரட்டல்களைத் தடுக்க போலீசார், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேக்கிடமாக இருந்த 3 இந்தியர்களை விசாரிக்கும்போது அவர்கள் தப்பியோட முயன்றனர். அதை தொடர்ந்து அவர்கள் விரட்டி பிடித்து கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் ஹர்ஜோத் சிங் 21,தரண்வீர் சிங் 19,தயஜீத் சிங் பில்லிங் 21 என தெரியவந்தது.

இவர்கள் மூன்றுபேர் மீதும் துப்பாக்கியால் சுட்டது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் வருகிற பிப்ரவரி 5 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் வெளிநாட்டவர் என்பதால், அவர்களின் குடியுரிமை மற்றும் விசா நிலவரம் குறித்து Canada Border Services Agency (சிபிஎஸ்ஏ) விசாரணை நடத்தி வருகிறது.

சர்ரே நகரில் சமீபகாலமாக அதிகரித்து வரும் பணப்பறிப்பு மிரட்டல்களைத் தடுக்க போலீசார் அமைத்துள்ள புராஜக்ஸ் அசுரன்ஸ் என்ற சிறப்புப் பிரிவின் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link