கமேனி செய்த குற்றத்தால் போர் நடக்கிறது: சொல்கிறார் அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சர்

வாஷிங்டன்: ஈரான் ஆட்சியாளரும் மதகுருவுமான கமேனி செய்த குற்றத்திற்கான தண்டனையாக போர் நடக்கிறது என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் ஹெக்சேத் கூறியுள்ளார்.

ஈரான் மீதான தாக்குதல் தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அதிபர் டிரம்ப் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி, ஈரானுக்கு எதிராக மிக துல்லியமான, சிக்கலான ராணுவ நடவடிக்கை துவங்கி உள்ளது. 47 ஆண்டுகளாக ஈரான் ஆட்சியாளர்கள், அமெரிக்காவுக்கு எதிராக மறைமுக யுத்தம் நடத்தி வந்தனர். இதனை அவர்கள் வெளிப்படையாக சொல்லவில்லை. நமது மக்களின் ரத்தம், பெய்ரூட்டில் கார் குண்டுவெடிப்பு, கப்பல்கள் மீது ராக்கெட் தாக்குதல், தூதரக அதிகாரிகள் கொலை, அமெரிக்கா மற்றும் ஈராக்கில் குண்டுவெடிப்பு மூலமும், அதற்கு தேவையான பணம் மற்றும்ஆயுதங்களை ஈரான் படையினர் வழங்கி உள்ளனர்.

இந்த போரை நாங்கள் துவங்கவில்லை. ஆனால், டிரம்ப் உத்தரவுப்படி அவர்களை முடித்து வருகிறோம். கமேனி செய்த குற்றத்திற்கான தண்டனையாக அமெரிக்கா இந்த போரை நடத்துகிறது. அமெரிக்கர்களை கொன்றாலோ அல்லது அமெரிக்கர்களுக்கு மிரட்டல் விடுத்தாலோ அவர்கள் உலகில் எந்த மூளையில் இருந்தாலும் அவர்களை வேட்டையாடுவோம். எந்த மன்னிப்பு கேட்டாலும் அதனை பொருட்படுத்தாமல் அவர்களை கொல்வோம்.

ஈரான் அல்லது மதவெறி உடையவர்கள் போன்றவர்கள் அணு ஆயுதம் வைத்து இருக்கக்கூடாது என்பதில் அதிபர் தெளிவாக உள்ளார். பலர் அதனை சொல்லியிருந்தாலும், ஆனால் அதனை அமல்படுத்துவதற்கு தைரியம் வேண்டும். அதிபர் டிரம்ப்பிற்கு அந்த தைரியம் உள்ளது. அணுஆயுத மிரட்டல் கொள்கைக்காக சக்திவாய்ந்த ஏவுகுணைகள் மற்றும் டிரோன்களை ஈரான்வைத்து இருந்தது. ஈரானின் மிரட்டல் முன்னாள் அதிபர் ஒபாமாவிடம் வேலை செய்தது. டிரம்ப்பிடம் நடக்கவில்லை. ஆட்சி மாற்றத்துக்காக போர் நடக்கவில்லை. ஆனால், ஆட்சி மாறியது. இதனால், உலகம் மிகவும் சிறப்பாக உள்ளது.

ஈரானின் ஏவுணைகள், ஏவுகணைகள் தயாரிக்கும்இடம், கடற்படை மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் அணு ஆயுதங்களை அழித்து வருகிறோம். அவர்களுக்கு மன்னிப்பு வழங்காமல் தாக்குகிறோம். ஒவ்வொரு நாளும் அமெரிக்காவின் திறன் அதிகரித்து வருகிறது. ஈரான் பலவீனம் அடைந்து வருகிறது. ஆரம்பம் முதல் முடிவு வரை போருக்கான விதிமுறைகளை நாங்கள் வகுத்து உள்ளோம். இந்த சந்தர்பத்தை ஈரான் மக்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்புகிறோம். இந்த முயற்சியில் இழப்புகள் இருக்கும். போர் எப்போதும் நரகம் தான். எப்போதும் அப்படியே தான் இருக்கும். இந்த போரில் உயிரிழந்த அமெரிக்க படை வீரர்களுக்கு அமெரிக்கா ஞ்சலி செலுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.E

Source link