ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, ஸ்வாசிகா, ஷிவதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஆண்டு ஜூலையில் வெளியானது.
போஸ்டரை தொடர்ந்து படத்தின் டீசர் அதே மாதமும் வெளியாகியிருந்தது. டீசரில் சூர்யா இரண்டு கெட்டப்பில் தோன்றியிருந்தார். அடுத்ததாக படத்தின் முதல் பாடல் ‘காட் மோட்’ வெளியாகியிருந்தது. பின்பு நீண்ட மாதங்களாக இழுபறியில் இருந்த ரிலீஸ் தேதி வெளியானது. மே 14ஆம் தேதி படம் வெளியாகிறது. தொடர்ந்து படத்தின் செகண்ட் சிங்கிள் ‘நாங்க நாலு பேரு’ பாடல் வெளியானது. இப்பாடலை சிம்பு பாடியிருந்தார். ஆர்.ஜே.பாலாஜி இப்படத்தில் நடித்திருக்கும் நிலையில் அவரது கதாபாத்திரத்துக்கான பாடலாக அமைந்த இப்பாடல் பெரிய வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில் படத்தின் அடுத்த பாடல் குறித்து சாய் அபயங்கர் சமீபத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் ராப் பாடகர் பால் டப்பாவுடன் பணியாற்றுவது போல் பகிர்ந்திருந்தார். பின்பு ஆர்.ஜே.பாலாஜி, சமீபத்தில் நடந்த ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பட விழாவில் தமிழ் புத்தாண்டிற்குள் அடுத்த பாடல் வெளியாகும் எனத் தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது அதற்கான அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் மூன்றாவது தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள போஸ்டரை பார்க்கையில் சூர்யா கதாபாத்திரத்துக்கான பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது போல் தெரிகிறது.
#Karuppu Third Single on தமிழ் புத்தாண்டு day …!!!🔥🔥@Suriya_offl🖤🖤 @SaiAbhyankkar 🧨🧨 @DreamWarriorpic 💣💣@thinkmusicindia 💥💥 pic.twitter.com/lwIkrCct7S
— RJ Balaji (@RJ_Balaji) April 12, 2026
