கரூர்,
கரூரில் ராமேஸ்வரபட்டியில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களில் காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். போலீஸ் பாதுகாப்புடன் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மண்மங்கலம் அருகே உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு, அவரது உதவியாளர் சுப்பிரமணி வீடு, திமுக நிர்வாகி பாஸ்கரன் வீடு மற்றும் கோதைநகர் பகுதியில் உள்ள கார்த்தி, ரமேஷ் ஆகியோரின் வீடுகள் உட்பட மொத்தம் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கரூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது. செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
