கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ கேள்விகளுக்கு முறையாக பதில் அளித்து இருக்கிறேன்

அதைத் தொடர்ந்​து, விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: கரூரில் நடந்த துயரச் சம்​பவம் குறித்​து, சில கேள்வி​களை என்​னிடம் சிபிஐ அதி​காரி​கள் முன்​வைத்​தனர். அதற்கு முறையான பதிலை வழங்கி இருக்​கிறேன். குறிப்​பாக சாட்​சிகளின் அடிப்​படை​யில் அன்று நடை​பெற்ற சம்​பவம் குறித்து கேள்வி​களைக் கேட்​டனர். அந்த கேள்வி​கள், அதற்​கான எனது பதில்​கள் குறித்து பொது​வெளி​யில் கூறு​வது சரி​யாக இருக்​காது. ஆனால் முறை​யான கேள்வி​களுக்கு நான் முறை​யான பதில்​களை அளித்​திருக்​கிறேன்.

காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை என்​னிடம் விசா​ரணை நடத்​தினர். எத்​தனை கேள்வி​கள் கேட்​டார்​கள் என்​பது தெரிய​வில்​லை. நான் சம்பவ இடத்​தில் களத்​தில் இருந்து பணி​யாற்​றிய​தால், அவர்​கள் கேட்ட கேள்வி​கள் அனைத்​துக்​கும் முறை​யான பதில்​களைக் கூறி​யுள்​ளேன். மீண்​டும் விசா​ரணைக்கு அழைப்​பார்​களா என்​பது குறித்து எது​வும் கூற​வில்​லை. இவ்​வாறு செந்​தில்​ பாலாஜி தெரிவித்​தார்​.

Source link