கரூர் சம்பவம்: நாளை நேரில் ஆஜராக சிபிஐ சம்மன்; கால அவகாசம் கேட்ட விஜய் | Karur incident: CBI summons Vijay to appear in person tomorrow; he seeks time extension.

செப்டம்பர் 27, 2025 அன்று கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த ஜனவரி மாதம் டெல்லி சென்று சிபிஐ முன் ஆஜராகி இருந்தார்.

அப்போது சிபிஐ-யின் விசாரணை குழு விஜய்யிடம் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குத் தனது கட்சியோ அல்லது அதன் நிர்வாகிகளோ பொறுப்பல்ல.

தவெக தலைவர் விஜய்

தவெக தலைவர் விஜய்

மேலும், நான் அங்கேயே இருந்தால் மேலும் குழப்பம் ஏற்படும் என உணர்ந்து நான் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றேன்’ என விஜய் கூறியதாக தகவல் வெளியாகியிருந்தது. தேவைப்பட்டால் மீண்டும் இந்த வழக்கில் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் நாளை (மார்ச்.10) விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி இருக்கிறது. ஆனால் பல்வேறு திட்டமிட்ட நிகழ்வுகள் இருப்பதால் 10 நாட்கள் கால அவகாசம் வழங்க விஜய் தரப்பில் இருந்து கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

Source link