கரூர் துயர சம்பவம்: செந்தில் பாலாஜிக்கு சி.பி.ஐ சம்மன்|41 Deaths Case: Senthil Balaji to Face CBI Questions

கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கான விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது சி.பி.ஐ.

இந்த விசாரணையையொட்டி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஜராகும் படி சம்மன் அனுப்பியிருந்தது சி.பி.ஐ

இந்தச் சம்மன் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் செந்தில் பாலாஜி பதிவிட்டிருப்பதாவது…

“கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்குப் பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரூர் சம்பவம்

கரூர் சம்பவம்
கோப்புப் படம்

வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்த சி.பி.ஐ விசாரணைக்கு விஜய் கடந்த ஜனவரி மாதம் இரண்டு முறை நேரில் ஆஜராகி இருந்தார்.

இன்று அவரை நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link