கரூர்: விஜய்க்கு கூட்டம் கூடுவது இயல்புதான், ஆனால் அவை எல்லாம் ஓட்டாக மாறுமா என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி

கரூர்: விஜய்க்கு கூட்டம் கூடுவது இயல்புதான், ஆனால் அவை எல்லாம் ஓட்டாக மாறுமா என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சந்தேகம் தெரிவித்துள்ளார்.

அவரது பேட்டி;

விஜய் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார். திரைத்துறையில் பிரபலமாக இருக்கிறார். அதனால் அவருக்கு கூட்டம் கூடுவது இயல்புதான் என்று நான் நினைக்கிறேன். நிறைய வாலிபர்கள் மத்தியில் அவர் ஒரு ஸ்டார் ஆக உள்ளார்.

ஆனால் திரைத்துறையில் அவர் அடைந்த வெற்றி, புகழ் தேர்தலில் ஓட்டாக மாறுமா என்று தெரியாது. ஏன் என்றால் தேர்தல் என்பது ஒரு களப்பணி. ரெண்டு கூட்டணியும் கடுமையாக பிரசார களத்தில் உள்ளன. தவெக வேட்பாளர்கள் கொஞ்சம் தடுமாறுவதை பார்க்க முடிகிறது. சின்னமோ, பேனரோ, கொடியோ இல்லாமல் இருப்பதை பார்க்க முடிகிறது. விஜய்க்கு தேர்தலில் அவை எல்லாம் ஓட்டாக மாறுமா என்பதை தேர்தலுக்கு பின்னரே தீர்மானிக்க முடியும்.

காங்கிரஸ் ஒரு 130 ஆண்டுகள் பழமையான கட்சி. நேர்மைக்கும், உண்மைக்கும் பெயர் போன கட்சி. ராகுலால் வழிநடத்தப்படும் கட்சி. ஒரு நல்ல ஆட்சிக்கு, சிறப்பான முதல்வர் 2வது முறையாக அமர வேண்டும் என்ற ஆட்சிக்கு போடப்படும் ஓட்டு.

நிறைய திட்டங்களை தமிழக அரசு செய்திருக்கிறது. குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் சென்று சேர்ந்துள்ளது. எல்லாம் சேர்ந்த ஒரு வெற்றியை எதிர்நோக்கி உள்ளோம். எனவே திமுக கூட்டணி ஓட்டுகளை அவர்(விஜய்) பெருமளவு பிரிப்பார் என்று எனக்கு தோன்ற வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link