மக்கள் பணத்தில் ஒருபைசா கூட தொடமாட்டேன். தற்போது ஆளுகிறவர்களும், இதற்கு முன் ஆண்டவர்களும் இதைச் சொல்ல முடியுமா? நீங்கள் ஒழுங்கா ஆட்சி நடத்தியிருந்தால் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டிருக்குமா? பெண்களுக்கு பாதுப்புக் கிடைக்காமல் இருந்திருக்குமா? இதற்கெல்லாம் பதில் சொல்ல தகுதி இருக்கிறதா?இரண்டரை வயது குழந்தையை திமுக-வை சேர்ந்தவர் கொலை செய்தார். விளாத்திகுளம் பகுதியில் பிளஸ் டூ மாணவி கொலை செய்யப்பட்டதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?
போலீஸாரை பொம்மையாக வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்குநேரி சம்பவத்தை ஏன் தடுக்கவில்லை? சட்டவிரோதமாக மணலை, கனிம வளங்களை திருடுகிறார்கள். குடும்பமாக கொள்ளை அடிக்கிறார்கள். ஆட்சி முழுக்க ஊழல் என்று நாறிக்கிடக்கிறது. இந்நிலையில் எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஓட்டுக் கேட்பீர்கள்.
உங்கள் பணத்தை வைத்து மக்களை விலைக்கு வாங்க முடியாது. இது மாற்றத்துக்கான தேர்தல், மாற்றத்தை கொண்டுவரப்போகும் தேர்தல். இதை உங்களாலேயோ மற்றும் பலராலேயோ தடுக்க முடியாது. வசதியான வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டு, அத்தனை வலிகளையும் தாங்கி வந்துள்ளேன். தமிழகத்தில் திமுக-வுக்கும் தவெக-வுக்கும் தான் போட்டி. இது விசில் புரட்சி தேர்தலாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொதுக்கூட்டத்துக்குப் பின்னர் தாழையூத்தில் இருந்து வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, சமாதானபுரம் வழியாக கேடிசி நகர் வரையிலும் சுமார் 20 கி.மீ. தூரம் திறந்த வேனில் நின்றபடியே அவர் வாக்குச் சேகரித்தார். வழிநெடுக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவரை வரவேற்றனர்.
